இலங்கையின் 9–வது அதிபராக அனுரா குமார திசாநாயக பதவி ஏற்ப

கொழும்பு, செப்.23 இலங்கையில் புதிய அதிபராக அனுரா குமாரதிசாநாயக இன்று பதவிஏற்றுக்கொண்டார். சிங்­களர், தமி­ழர், முஸ்­லீம்­கள் என அனைத்து இலங்­கையர் ஒற்­று­மையே எனது புதிய தொடக்­கம் என இலங்கை அதி­பர் தேர்­தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசா­நா­யக பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.இலங்­கை­யில் நடை­பெற்ற அதி­பர் தேர்­த­லில் தேசிய மக்­கள் சக்தி (என்­பிபி) முன்­னணி சார்­பில் போட்­டி­யிட்ட அனுரா குமார திசா­நா­யக்க (56)வெற்றி பெற்­றார். இலங்கை­யின் 9வது அதி­ப­ராக இன்று பதவி ஏற்றார்.இலங்கைஅதி­பரை தேர்வு செய்­வ­தற்­கான தேர்­தல் சனிக்­கி­ழமை நடை­பெற்­றது.இந்த தேர்­த­லில்,38 வேட்­பாளர்­கள் களத்தில் இருந்­த­னர். அவர்­களில் தற்­போ­தைய அதி­பர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஐக்­கிய சக்தி முன்­ன­ணி­யின் சஜித் பிரேம­தாசா, தேசிய மக்­கள்­சக்தி தலை­வர் அநுர குமார திசா­நா­யக்க, பொது­ ஜன பெர­முன கட்­சி­யின் நமல் ராஜ­பக்ச ஆகி­யோர்­ தான் முக்­கிய வேட்­பாளர்­களாக இருந்­தனர். முதல் கட்­டத்­தில் 50 சத­வீ­தத்­துக்­கும் மேல்வாக்­கு­களை பெறாத கார­ணத்­தால், 2வது விருப்பவாக்கு எண்­ணிக்­கையை நடத்த தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டது. 2 மற்­றும் 3வது விருப்ப சுற்று வாக்கு எண்­ணிக்­கையின்­ போ­தும் அனுரமுத­லி­டத்­தில் இருந்­த­தால் அவர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து,இலங்­கை­யின் 9வது அதி­ப­ராக மார்க்­சிஸ்ட் தலைவர் அநுரகுமாரதிசா­நா­யக்க இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.அநுர கூறு­கை­யில், “பலநூற்­றாண்டு நாம் வளர்த்துவந்த கனவு இறு­தி­யாக நன­வா­கி­யுள்­ளது.இந்த சாதனை எந்­தவொரு தனி­ந­ப­ருக்­கும் சொந்­தமா­னது அல்ல.உங்­க­ளின் கூட்டு முயற்சி­யின் மூலமே இந்தவெற்றி சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. உங்­க­ளின் அர்ப்­பணிப்பு நம்மை இவ்­வளவு தூரம் கொண்டு வந்­துள்­ளது.அதற்­காக நான் மிக­வும் நன்­றி­யுள்­ளவ­னாக இருப்­பேன். இந்த வெற்றி நம் அனை­வ­ருக்­கும் சொந்­தமா­னது. சிங்­கள­வர்­கள், தமி­ழர்­கள்,முஸ்­லிம்­கள் மற்­றும் அனைத்து இலங்­கை­யர்­க­ளின் ஒற்­று­மையே இந்­தப் புதிய தொடக்­கத்­தின் அடித்­தளமாக இருக்­கும். புதிய மறு­மலர்ச்சி இலங்கையை படைப்­போம்”என்­றார்.