நாயை கரடியாக்கி காட்சிக்கு விட்ட சீன பூங்கா

சீனா, செப். 22பாண்­டாக்­க­ளின் பூமியாக கருதப்­படுகி­றது சீனா. ஆனால் அங்கு நிஜபாண்­டாக்­க­ளுக்­குப் பதி­லாக நாய்­க­ளுக்கு வர்­ணம் பூசி கரடியாக்கி காட்­சிக்கு வைத்த வினோ­தம் நிகழ்ந்துள்­ளது.ஷான்­வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்­கா­வில் இந்த சம்­ப­வம் நடந்துள்ளது. பார்­வைக்கு விடப்­பட்டிருந்தபாண்­டாக்­க­ளில் ஒன்று நாக்கை தொங்­க விட்டுக்கொண்டு மூச்சி­ரைக்­கும் காட்சியும், திடீ­ரென நாய்­போல குரைக்கத் தொடங்கியதும் பார்­வை­யா­ளர்­களை அதிர்ச்சிய­டைய வைத்­தது.அப்­போ­துதான் அது வர்­ணம் பூசப்­பட்ட நாய் என்று தெரிய­வந்­தது.இதை­யடுத்து அந்த கூண்­டில் இருந்த நாய்க் கரடிகளை வீடி­யோ­வாக எடுத்து பகிர்ந்து வைர­லாக்­கி­னார்­கள். அது உள்­ளூர்  ஊட­கங்­க­ளிலும் வெளியா­னது. அதன்­பி­றகு பூங்கா நிர்­வா­கம் நாய்­க­ளுக்கு பெயிண்ட் பூசியஉண்­மையை ஒப்புக்­கொண்­டது. சிலபார்­வை­யா­ளர்­கள் தங்­க­ளுக்­கான கட்­ட­ணத்தை திருப்பித் தர வேண்­டும் என்று முறை­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­னார்­கள்.