திருக்கார்த்திகையை முன்னிட்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் திருக்கார்த்திகை ஒட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது இருப்பினும் களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் ஆர் பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம்,கோட்டூர், ஓடையாக்குளம், தேவிபட்டணம், சேத்துமடை, அம்பராம் பாளையம், சமத்தூர், அங்கல குறிச்சி, பில் சின்னாம் பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடக்கிறது. சமையலுக்கு தேவையான பானை மற்றும் இன்றி நவராத்திரி கொழுப்பு பொம்மை கார்த்திகையையொட்டி அகல் விளக்கு என முக்கிய விசேஷங்கள் போதும் மண்பாண்டம் தொழில் பரபரப்பாக இருக்கும். இதில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணியில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்கள் ஈடுபட துவங்குவர். இந்த ஆண்டில் வரும் நவம்பர் 16ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்குகிறது டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தீப வழிபாடு நடக்கிறது. தற்போது, மழை குறைவால் கார்த்திகை மாதத்திற்கு தேவையான அகல் விளக்கு தயாரிப்பு பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர் .அதிலும் இரண்டு வாரங்கள் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் அகல் விளக்கு தயாரிப்பு உலர வைக்கும் பணியை தொழிலாளர்கள் தீவிரமாக்கி உள்ளனர் ஆனால் அகல்விளக்கு தயாரிப்பதற்கு உண்டான புதிய தரமான களிமண் கிடைக்காமல் அகல் விளக்கு தயாரிக்கும் பணிக்கான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை உடைந்த ஆண்டில் அகல் விளக்கு விலை அதிகரித்துள்ளது.