“ராகுல் காந்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் !

சென்னை: மக்­களவை எதிர்க்­கட்­சித் தலை­வர் ராகுல் காந்தி­யின் பாது­காப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்­திய அரசுக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின்வலியுறுத்­தியுள்­ளார். ராகுல் காந்­திக்கு பாஜக பிரமு­கர் ஒரு­வ­ரும் மகாராஷ்டிராவின் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்எல்ஏ ஒரு­வரும் மிரட்­டல் விடுத்­ததைசுட்டிக் காட்டி தமிழக முதல்­வர் ஸ்டாலின் இந்த வேண்டு­கோளை முன் வைத்துள்­ளார்.அண்­மை­யில் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி கூறிய கருத்து­க­ளுக்கு கண்­ட­னம் தெரிவித்த பாஜக பிரமு­கர் தர்­வீந்­தர் சிங்,“ராகுல் காந்தி, இது­ போன்ற செயல்­களில் இருந்து விலகி இருங்­கள்,இல்­லை­யெ­னில் வரும்காலத்தில் உங்­கள் பாட்­டிக்கு ஏற்­பட்டகதியை நீங்­க­ளும் சந்திக்க நேரிடும்”எனக் கூறியிருந்­தார்.அதே­போல் மகாராஷ்டி­ராவில் ஆளும் ஷிண்டேசேனா கட்சியின் எம்எல்ஏ ஒரு­வர், ‘ராகுல் காந்தியின் நாக்கை துண்டித்து வருப­வ­ருக்கு சன்­மா­னம்’ என்று அறிவித்­த­தோடு பல்­வேறு அரு­வ­ருக்­கத்­தக்க விமர்­சனங்­க­ளை­யும் அச்சுறுத்­தல்­க­ளை­யும் முன்­வைத்தி ருந்­தார். இவற்­றைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்­கத்தில், “பாஜக தலை­வர் ஒரு­வர் “ராகுல்காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவ­ருக்கும் நேரும்” என­வும்,ஷிண்டே சேனாவின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் “ராகுல் காந்தியின் நாக்கை அறுப்­ப­வ­ருக்­குப்பரிசு” என­வும், இன்ன பிறவகை­க­ளிலும் மிரட்­டல் விடுத்திருப்­ப­ தாக ஊடகங்­களில் வெளி­வந்துள்ள செய்­தி­கள் மிக­வும் அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­ற ன. எனது சகோ­தரர் ராகுல் காந்தியை நோக்கி மக்­கள் ஈர்க்­கப்­படு­வ­தும், நாளுக்கு நாள் அவ­ருக்­குக் கூடி வரும் பொதுமக்­களின் ஆதரவும் பல­ரை­யும் மிரளச் செய்துள்­ள­தன் தொடர்ச்சி­யா­கவே இத்­த­கைய அச்சுறுத்­தல்­கள் விடுக்­கப்­ப­டுகின்­றன.மக்­களவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான ராகுல்காந்தியன்  பாது­காப்பை உறுதிசெய்­யும் வகை­யில் ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து, அச்­சுறுத்­த­லுக்­கும் வன்­மு­றைக்­கும் நமது மக்­களாட்­சியில் இட­மில்லை என்­பதை உறுதிப்­ப­டுத்த வேண்டும்.” என்று பதி­விட்டுள்­ளார்.