அன்பில் மகேஷ் கைதை சரவெடி வெடித்து கொண்டாடுங்கள்… திமுக நிர்வாகி!

அன்பில் மகேஷ் கைது வரவேற்கத்தக்கது தான் என்று திமுகவைச் சேர்ந்த ஒருவரே பேசியிருப்பது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.

ஜாமின் கேட்டு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரை ஜாமினில் எடுக்க திமுகவினர் முயற்சி எடுத்து வரும் நிலையில், அன்பில் மகேஷ் கைது வரவேற்கத்தக்கது தான் என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற நகர தலைவர் ஜாகிர் உசேன் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

அதில், ‘மூத்த அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி கடிதத்துக்கு மரியாதை கொடுக்காதவர் அன்பில் மகேஷ். அவர் கைதாவது ஒன்றும் தவறு இல்லை. வரவேற்கத்தக்கது தான்.

நான் பணி மாறுதலுக்காக 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டியிருக்கிறேன். இதை எங்கு அழைத்து கேட்டாலும் நான் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். சென்னைக்கு போய் இந்த பணத்தை கொடுத்தேன்.

ஒரு தலைமை ஆசிரியர் மூலமாக அரியலூர் சிஇஓ ஆபீஸ் வழியாக அந்தப் பணி மாறுதலுக்காக கொடுத்தேன். இதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன்.

இதே மாதிரி தான் வளவிசெட்டி பாளையத்திலிருந்து 11 ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் 7.5 லட்சம் ரூபாய் கட்டி விட்டு தான் வந்திருக்கிறார்கள்

டிஸ்ட்ரிக்ட் டு டிஸ்ட்ரிக்ட்  என்றால் 7.5 லட்சம் பணம் கொடுத்து தான் பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டத்திற்குள் பணி மாறுதல் என்றால் 3.5 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்

அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி மூன்று முறை கடிதம் கொடுத்தார். இந்த மூன்று கடிதத்தையுமே அன்பில் மகேஷ் நிராகரித்துவிட்டார்.

ஒரு சீனியர் அமைச்சர், கட்சியில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் கடிதத்தையே ஏற்க வில்லை என்றால், அன்பில் மகேஷ் கட்சிக்கு தகுதியற்றவர்.

நாளைக்கு அனைவரும் சரவெடி வையுங்கள். அதில் தவறு இல்லை. அவருடைய கைது வரவேற்கத்தக்கது. என்னுடைய மனைவிக்கு பணி மாறுதலுக்காகவே 7.70 லட்சம் செலவழித்தேன். ஒரு கட்சிக்காரனுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு எல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அவருடைய கைதை பற்றி யாரும் வருத்தப்பட வேண்டாம். அவர் சிறைக்கு செல்லக்கூடிய நபர் தான்” என்று தெரிவித்துள்ளார்.