ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் மனு!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி டி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக,முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அவரது மனு நேற்று காலை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் சென்னை அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார்.

தற்போது சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்த நிலையில் ஜாமின் கேட்டு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.

தனியார் பள்ளிகள் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை வழக்கமான நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுத்தது. எனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூலித்ததற்கு நான் பொறுப்பாக முடியாது.

எனக்கு கணைய அழற்சி பாதிப்பு உள்ளது. தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது ஜாமின் மனு அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது