சேரன்மகாதேவியில் பரிதாபம் பைக் மீது கடமான் மோதி சமையல் தொழிலாளி பலி

சேரன்மகாதேவி,செப்டம்பர் 12:

சேரன்மகாதேவி பைக் மீது காடமான் மோதி சமையல் தொழிலாளி பலியானார் வாலிபர் படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மேல வடக்கு தெருவை சார்ந்த சண்முகவேல் மகன் ஆறுமுகம் என்ற மாரிக் குட்டி ( 49 ).சமையல் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 9:45 மணி அளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த இசக்கி முத்து மகன் கார் டிரைவரான விக்னேஷ்( 33 ) என்பவருடன் பைக்கில் சென்றார்.

சேரன்மகாதேவி ரவுண்டானா கீழ்புறம் பைக் வந்தபோது திடீரென சாலையில் குறுக்கே பாய்ந்து வந்த கடா மான் பைக் மீது மோதியது.இதில் பைக் கவிழ்ந்து இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர், இதில் மாரி குட்டியும் விக்னேஷும் படுகாயம் அடைந்தனர் அவ்வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்ல வழியில் வரி கொட்டி பரிதாபமாக இறந்தார். விக்னேஷுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து உஷார் நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாரி குட்டி வேலம்மாள் ( 44 ) என்ற மனைவியும், சோனாலி(23) இந்த மகளும், சண்முகம் (19) என்ற மகனும் உள்ளனர்.வீட்டின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்து மாரி குட்டி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை நிலைகுலைய செய்தது.

 நிவாரணம் வழங்க சப் கலெக்டர் மனு.

விபத்தில் உயிரிழந்த சமையல் தொழில்யான மாரி குட்டிக்கு மனைவி மற்றும் மகன்,மகள் உள்ளனர்.மாரி குட்டியின் சொற்ப வருமானத்தை மட்டுமே கொண்டு இவரது குடும்பம் நடந்து வந்தது கடன்கள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி மாரி குட்டி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை நெருக்கடி ஆக்கியுள்ளது எனவே பலியான மாரி குட்டியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி அவரது உறவினர்கள் திரண்டு வந்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

இதுவரை 3 பேர் பலி

சேரன் மகாதேவியில் விபத்து நடந்த இடத்தில் இதற்கு முன்னர் கடாமான் குறுக்கே பாய்ந்து பலமுறை விபத்து நடந்துள்ளது இதில் மூன்று பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல லட்ச ரூபாய் மருத்துவமனையில் செலவு செய்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆபத்தான இந்த இடம் குறித்து அவ்விடத்தில் ஒளிராமல் கிடக்கும் மின் விளக்குகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.இது குறித்து நேற்று முன்தினம் தமிழன் உதயம் வெப்சைடில் செய்தி வெளியானது இந்நிலையில் அன்றிரவே சமையல் தொழிலாளி விபத்தில் சிக்கி பரிதமாக உயிரிழந்தது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது