சேரன்மகாதேவியில் பழமை வாய்ந்த ராமசாமி கோயில் பவித்ர உற்சவ விழா

 

சேரன்மகாதேவி ராமசாமி கோயிலில் நடந்த பவித்ர உற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ராமபிரான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

-வீரவநல்லூர், செப்.10: சேரன்மகாதேவிராமசாமி கோயிலில் பவித்ர உற்சவ விழா கொண்டாடப்பட் டது.

சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றுச்சாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை யான ராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பவித்ர உற்சவ விழா 4 தினங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பவித்ர உற்சவம் என்பது வைணவக் கோயில்களில் நடத்தப்படும் மிகவும் புனிதமான ஒரு பிரதான விழாவாகும். ஆண்டு முழு வதும் கோயில்களில் நடக் கும் வழிபாடுகள் அல்லது சடங்குகளின் தெரியாமல் ஏற்படும் தவறுகள், பிழைகள் மற்றும் குறைகள் நீங்க பிராயச்சித்தமாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பவித்ரா உற்சவ விழா செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடந்தது. விழாவையொட்டி கோயிலில் கலந்த 4 தினங்களாக அனுக்ஞை புண்ணியகம், பவித்திரம் மாலை ஆரோபனம், பிரதான ஹோமங்கள், திருவாராதனம், சாற்றுமறை கோஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடந்தது.

மேலும் வேத, திவ்ய பிரபந்த பாராயணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ராமபிரானை தரிசனம் செய்தனர். விழாவில் உபய தாரர் மதுரை ஸ்ரீகாந்த் அய்யங்கார், கோயில் ஆய் வாளர் சந்தானலெட்சுமி, செயல் அலுவலர் தமிழ் செல்வி, கணக்கர் நாராய ணமகேஷ், அர்ச்சகர்கள் கோவிந்தராஜ் பட்டாச்சா ரியார், ராமசந்திரன் உள் பட பலர் கலந்துகொண்ட னர்.