தமிழ்நாட்டில் அக்.6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை அமலில் இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

நாளை மறுநாள்(09.09.2026) வேட்புமனு தாக்கல் தொடங்கும். வரும் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 17ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 09.10.2026 ஆண்டு நடைபெற உள்ளது.