கேப்டன் விஜயகாந்தின் 75-வது பிறந்தநாள் விழா!

லக்கூரில் தேமுதிக சார்பில் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

திட்டக்குடி, ஆக.29:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் ஊராட்சியில், தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 75-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு தேமுதிக மங்களூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தேமுதிக கிளைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு லட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

100 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

இதனைத் தொடர்ந்து லக்கூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 100 மாணவ, மாணவிகளுக்கு தேமுதிக சார்பில் இலவசமாக நோட்டு, பேனா, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

கேப்டன் விஜயகாந்த் ஏழை, எளிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்ததை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உதவிகள் வழங்கப்பட்டதாக விழாவில் தெரிவித்தனர்.

பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் திமுகவைச் சேர்ந்தவருமான வெங்கடேசன், தேமுதிக கிளை துணைச் செயலாளர் செந்தில், பொருளாளர் வெங்கடேசன், அவைத் தலைவர் வி.வெங்கடேசன், குமார், எம்.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரன், உதவி ஆசிரியர் சந்தனகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவை லக்கூர் பகுதியைச் சேர்ந்த தேமுதிகவினர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசித்து வரும் கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்களும் இணைந்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.