திருவெறும்பூரில் SDPI – சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

திருவெறும்பூர், ஆக. 22:
SDPI கட்சியின் திருவெறும்பூர் தொகுதி மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம், திருவெறும்பூர் காமராஜ் நகர் NSP பள்ளி வளாகத்தில் இன்று (22.08.2026) நடைபெற்றது.

மருத்துவ முகாமிற்கு SDPI கட்சியின் திருவெறும்பூர் தொகுதி தலைவர் I. சேக் முகமது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சதாம் உசேன், தொகுதி செயலாளர் முஜுபுர் ரஹ்மான், அமைப்பு செயலாளர் இஸ்மாயில் ராஜா, இணை செயலாளர் சிராஜுதீன், மகளிர் அணி மாவட்ட தலைவர் தாஜ் நிஷா, துணைத் தலைவர் தேவி, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ரம்ஜான், செயலாளர் பரக்கத் நிஷா, SDTU மாவட்ட தலைவர் சக்கரை மீரான், செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் மந்திரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் 37-வது வார்டு கிளை தலைவர் கேபிள் சித்திக், செயலாளர் கவுஸ் பாஷா, உறுப்பினர் பசீர், 38-வது வார்டு தலைவர் பசீர் இமாம், மைதீன், பீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் பொது மருத்துவம், மகளிருக்கான சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.