வீரவநல்லூர்: அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சேவா ரத்னா விருதுகள் வழங்கும் விழா வீரவநல்லூர் சுந்தரம் மகாலில் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் Rtn. எம்.கே. முரளிதரன் தலைமை வகித்தார். செயலாளர் Rtn. குமார் சுந்தரம், வாசகர் வட்ட செயலாளர் Rtn. சந்திரசேகர், Rtn. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ-மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து Rtn. கணபதிராமன் ரோட்டரி பிரார்த்தனையை நடத்தினார். Rtn. சரவணன் ரோட்டரி உறுதிமொழி வாசித்தார். Rtn. ஆசிரியர் பழனிச்செல்வம் திருக்குறள் வாசித்தார். Rtn. N.G. முருகேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் பிரேமாவதி, மணியம்மை, குமார், கீதா ஆறுமுகம், 7-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் கீதா ஆறுமுகம், கல்லிடைக்குறிச்சி வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் லத்தீப், ரோட்டரி சங்கத் தலைவர் Rtn. முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக வழக்கறிஞரும் ரோட்டரி உதவி ஆளுநருமான Rtn. நவமணி கலந்து கொண்டு, ரோட்டரி சங்கத்தின் சமூக சேவைகள் மற்றும் பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்படும் நலத்திட்டப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
10 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 10 பெண்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. Rtns. இஸ்மாயில், டேனியல், ராஜசுந்தரம், முத்துக்கிருஷ்ண குமார், முருகேசன், பரமசிவம், சுரேஷ்குமார், குமாரகண்ணன் உள்ளிட்டோர் தையல் இயந்திரங்களை வழங்கினர்.
சேவைக்கான விருதுகள்
சமூகத்தில் சிறப்பாக சேவையாற்றியவர்களை பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
- சிறந்த கல்வித்துறை சேவை விருது – பிரபு சங்கர்
- ஆன்மீக சேவை விருது – ராகவன்
- சமூகப் பணி விருது – இரா. பழனி
- இளம் தொழிலதிபர் விருது – ஸ்மார்ட் சுரேஷ்குமார்
விருது பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து, விருதும் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகளை Rtn. சீ. இசக்கி சரவணன் தொகுத்து வழங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் Rtn. குமார் சுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட பொருளாளர் பெரியார்பித்தன், சிவதொண்டன் பாலமுருகன், வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஜான், துணைத் தலைவர் உலகநாதன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.






