வீரவநல்லூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மாண்புமிகு என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மருத்துவ முகாம் – 52 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வீரவநல்லூர், ஜூலை 19:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடன், தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் S. அழகு ராஜா தலைமையில், வீரவநல்லூர் 6-வது வார்டு பேரூர் கழகம் மற்றும் சுபிக்ஷா டயக்னாஸ்டிக்ஸ் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நவீன் ராஜா மற்றும் டாக்டர் சுரேகா கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பித்தனர்.
மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் தேவையான மருந்துகளைப் பெற்று பயனடைந்தனர். மேலும், 52 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் A. அலெக்ஸ், J. அமல், 6-வது வார்டு செயலாளர் A. ரோஷன் மற்றும் 6-வது வார்டு கழக நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாம், சமூக நலப்பணிக்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.