காலிக்குடங்களுடன் வந்த முதியோர்களால் பரபரப்பு
சேரை ஜூன்.25
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியில் இயங்கிவரும் தூயகம் முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்
முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்
இந்திலையில் முதியோர் இல்லத்தில் குடிநீர் இணைப்பு இல்லாமல் பொது குடிநீர் குழாயை பயன்படுத்தி வந்தனர்
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தனி குடிநீர் இணைப்பிற்காக முயற்சி செய்தும் கிடைக்காததால் நிர்வாகி டயானா மார்ட்டின் தலைமையில் 25க்கும் மேற்பட்ட முதியவர்கள் காலிக்குடங்களுடன் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது
பின்னர் நிர்வாகி டயானா மார்ட்டின் சார்ஆட்சியர் ஆயுஷ் குப்தாவை சந்தித்து விளக்கம் அளித்தார்
சார்ஆட்சியரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மிக விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க உறுதி அளித்ததின்பேரில் முதியவர்கள் பராமரிபபு இல்லத்திற்கு அழைத்து
செல்லப்பட்டனர்






