சேரன்மகாதேவியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேரன்மகா தேவியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பிறந்தநாள் முன்னிட்டு பொது மக்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஜூன் 22ஆம் தேதி அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது விஜய் முதலமைச்சர் ஆக இருப்பதால் இந்த முறை முன்னதாகவே அவரது தொண்டர்கள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் எச் ஜாகிர் உசேன் தலைமையில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் மாதத்தை முன்னிட்டு ஜூன்4 முதல் ஜூன் 22 வரை தினமும் மதிய வேளையில் சேரை பி. மாரியப்பன் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டுவந்தது.
பிறந்தநாள் அன்று காலையில் சேரன்மகாதேவி கீழ முதல் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ வலம்புரி வல்லம் விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் இருக்கும் குழந்தைகள் மையத்தில் மாணவ மாணவிகளுக்கு அமர்வதற்கு பிளாஸ்டிக் சேரும், இனிப்பும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதியம் அன்னதானத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், உடல்ஊனமுற்றவர்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலை ஏழு மணி அளவில் சேரன்மகாதேவி சாட்டு பால விநாயகர் கோவிலில் மாண்புமிகு முதலமைச்சர் பெயரில் சிறப்பு அர்ச்சனை பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த அன்னதான விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் சேரை நகரச் செயலாளர் முகமது இஸ்மாயில், துணை செயலாளர் ஜென் 5 வசந்தி எட்வின்,மணிகண்டன், முகைதீன், ஜான்சி மேரி, தாமரை, அறிவி பவுண்டேஷன் மைக்கேல்,கரிஷ்மா கல்வி அறக்கட்டளை பவுண்டர் பிரிஷ்சிட் ,ராஜேஷ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் இன்று 22ம் தேதி வரை 19 நாட்களும் தொடர்ந்து மதிய வேலைகளில் பொது மக்களுக்கு அன்னதானம் சேரை பி.மாரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.






