எழுச்சித் தமிழர் முனைவர்
தொல் திருமாவளவன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் வருகை தந்தார் அப்போது ஒரு நிகழ்ச்சியாக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் முருகேசன் அவர்களின் இல்ல திருமண விழா போன மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் எழுச்சித்தமிழர் அந்த நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை எனவே தற்போது முருகேசன் அவர்களின் இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தி முருகேசன் அவர்களின் மனைவியார் அவர்களின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து அவர்களின் உறவினர்கள் இடத்தில் நலம் விசாரித்தார் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி. முன்னாள் மாவட்ட செயலாளர்
பால அறவாழி. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் மாநில நிர்வாகிகள் முருகானந்தன். கருணா.
சிதம்பரம் நகர செயலாளர்கள் ஆதிமூலம் பாவாணன்.
மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ்.
சிதம்பரம் நகர நிர்வாகி சரித்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிதம்பரம் செய்தியாளர்.
வீ. இளமாறன்.






