தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆலங்குளம்
ஜூன்.12
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை
ஸ்ரீ முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி கிரிவலம், 27 நட்சத்திர மரங்களுக்கு பூஜை வல்லப கணபதி பூஜை மற்றும் ஞாயிறுதோறும் சிறப்பு பூஜைகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகிறது
அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளி தினமாகிய இன்று ஸ்ரீ முருகருக்கு சிறப்பு தீப ஆராதனை வழிபாடு மற்றும் நாடு நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கடையம் மட்டும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
பக்தர்களுக்கு காலை அன்னதானம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் சிறப்பாக செய்திருந்தார்






