கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா பாளை சமாதானபுரத்தில் சிறப்பாகக் கொண்டாட்டம்
திருநெல்வேலி, ஜூன் 3:
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளருமான மு. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிறுபான்மை அணி பனிமயம் அண்ணாதுரை தலைமையில் பாளை 8வது வார்டு சமாதானபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சமூக சேவகர் டாக்டர் ரா. ஞானசோமராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், மு. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அவர்கள் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் பாளை வடபகுதி பொறுப்பாளர் எம். சையது முகைதின், வழக்கறிஞர் உத்திரநாயகம், வார்டு கழக துணைச் செயலாளர் கோ. தமிழ்செல்வி, சுரேஷ் பாலியர் நேசன், இளைஞரணி நிர்வாகி டேனியல் ஜோண்ஸ், ரா. ரஞ்சித் சிங், கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கழக முன்னோடி பேச்சுப் பாண்டியன், துணை மேயர் கே.ஆர். ராஜு, முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த், ஆதிதிராவிட நல அமைப்புத் தலைவர் முலிக்குளம் பிரபு பாண்டியன், கிழக்கு மாநகர பொறுப்பாளர் ஏ.எல்.பி. தினேஷ், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கலைஞருக்கு புகழ்வணக்கம் செலுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாவட்ட பிரதிநிதியும் சமூக சேவகருமான டாக்டர் ரா. ஞானசோமராஜ் சிறப்பாக செய்திருந்தார்.






