டாக்டர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா:
சேரன்மகாதேவி போக்குவரத்து பணிமனையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சேரன்மகாதேவி, ஜூன் 3:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேரன்மகாதேவி பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொமுச) சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பணிமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொமுச மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் கணேசன் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் சமூகநீதி, கல்வி மற்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து பேசினார்.
மேலும், பணிமனை தலைவர் இரா. பழனி, செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, ரோலி லாரன்ஸ் உள்ளிட்ட தொமுச நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில், கலைஞர் அவர்களின் கொள்கைகளையும் சமூகநீதிக்கான பணிகளையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.






