ஸ்ரீநகர், செப்5 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது.செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25ந் தேதி 2 ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1 ந்தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்கு ப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,காங்கிரஸ் எம்.பி. ராகுல்கந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வந்தராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, ராம்பன் சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ராகுல் பிரசாரத்தில் ஈடு காந்தி தேர்தல் பட்டார். அப்போது அவர்கூறியதாவது,”ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் கொள்கைகளுக்கு இடையில் தான் மோதல்.இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. மாநிலம் முதல் முறையாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மாநிலத்தை அழித்து மக்களின் உரிமைகளைபறித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு அந்தஸ்து முதலில் மாநில அந்தஸ்து மீண்டும் பெற்றுத் தர வேண்டும்.ஏனென்றால், மாநில மட்டும் பறிக்கப்படவில்லை, மக்களின் உரிமைகள், வளங்கள் என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக அரசு கொண்டு வரப்பட்டது.ஆனால், ஜம்மு-காஷ்மீரில் இன்று மன்னர் ஆட்சி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல் படுகிறார்.ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே எஙகள் முதல் வேலை தேர்தலுக்கு முன்னதாக மாநில அந்தஸ்து பெற்றுத்தரவேண்டும் என்றும், மாநில அந்தஸ்துடன் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆனால், பாஜகவுக்கு அதுபிடிக்கவில்லை. மாநில அதிகாரத்தை குறைத்து ,யூனியன் பிரதேசமாக மாற்றும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது.பாஜக விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் ஜம்மு-காஷ்மீரு க்கு மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி பெற்றுத்தரும். அவ்வாறு ” இவர் கூறினார். இதனை தொடர்ந்து, அனந்த்நாக் மாவட்டத்திக்கு உள்ள டூரு பகுதி செல்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து மெகா பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது -ராகுல் காந்தி பேச்சு!






