சென்னை: “சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, தவிர்த்தாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.தனி அணியாக செயல்படுவதால் அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவதால் அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது” என அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் வாக்களித்தால் கட்சித் தாவலாகவே கருதப்படும்: எம்.பி. இன்பதுரை






