வேலூர்: வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவில் 14 உறுப்பினர்கள் கவுன்சிலராக உள்ளனர். இந்த கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த 2021ம் ஆண்டு நடந்தது. இதில் 8வது வார்டில் வெற்றி பெற்ற கிருஷ்ணவேணி (காங்கிரஸ்) மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் பல இடங்களில் காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகள் ராஜினாமா செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
தவெகவுடன் கூட்டணி; காங்கிரஸ் பெண் துணை தலைவர் ராஜினாமா






