ரூ.9 கோடியில் நவீனமாகும் சென்னை மாநகராட்சி தகவல் தொடர்பு கட்டமைப்பு அனலாக் முறையில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றம்!

சென்னை: சென்னை மாநக­ராட்சி­யின் தகவல் தொடர்பு கட்­ட­மைப்பை ரூ.9 கோடியே 30 லட்­சம் செல­வில் அன­லாக் முறை­யில் இருந்து நவீன டிஜிட்­டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்­கப்­பட்டு வருகி­றது.சென்னை மாநக­ராட்சி­யில் புயலும், பெரு­வெள்ளமும் எப்­போ­தாவது நிக­ழும் பேரிட­ராக இருந்­தது.ஆனால் அண்­மைக் காலமாக அது ஆண்­டு ­தோ­றும் நடை­பெ­றும் நிகழ்­வாக மாறிவிட்­டது. முந்­தைய பேரிடரை விட, அடுத்து வரும் பேரிடர், அதை விட பயங்­க­ர­மாக இருக்கி­றது. முந்­தைய பேரிடர்­க­ளில் கற்றபடிப்­பி­னை­களின் படி செயல்­பட்ட முற்­பட்­டால், அடுத்த பேரிடர் வேறு வகை­யில் வித்­தியா­ச­மாக அமைந்­துவிடு­கி­றது.இத்­த­கைய கால­கட்­டங்களில் தரைவழி தொலை­பேசி, செல்­போன் சேவைகள் முற்­றிலும் செயலிழந்­துவிடுகின்­றன. இதனால் மாநக­ராட்சி நிவா­ரணப் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்­படுகி­றது. இந்­நி­லையில், மாநக­ராட்சி நிர்­வாகம் கம்பியில்லா தொலைத்­தொ­டர்பு கட்­டமைப்பை பயன்­படுத்தி வருகி­றது. தற்­போது பயன்­ப­டுத்­தப்­பட்டு வருவது அன­லாக் முறை­யி­லானது.இந்த சேவையை தனி­யார் நிறுவனத்­திடம் இருந்து பெற்று, வாக்கிடாக்கி மூல­மாக தொடர்பு­ கொண்டு பேரிடர் காலங்­களில் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொண்டு வருகி­றது. இருப்­பினும் இந்த சேவை­யில் பல்வேறு குறை­பாடுகள் ஏற்­ப­டுகின்­றன. பிறரை தொடர்­பு ­கொள்­வ­தில் சிக்­கல்­கள் இருப்­ப­தாக மாநக­ராட்சி அதிகாரிகள் தெரிவிக்­கின்­றனர்.இந்­நி­லையில் கம்பி­யில்லா தொலைத்­தொடர்பு சேவை கட்­டமைப்பை டிஜிட்­டல் முறைக்கு மாற்ற மாநக­ராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநக­ராட்சி அதிகாரிகள் கூறிய­தாவது: இது நாள்வரையில் மாநக­ராட்சி­யின் கம்பியில்லா தொலைத்­தொ­டர்பு சேவை தனியாரிடம் இருந்து பெறப்­பட்டு வந்­தது. தற்போது மாநக­ராட்சியின் கம்பியில்லா தொலைத் தொ­டர்பு சேவையை நவீ­னமாக்கும் திட்­டத்­தின் கீழ், அதற்­கான கட்­டமைப்பை மாநக­ராட்சி நிர்­வாகமே சொந்­த­மாக உரு­வாக்­கத் திட்­ட­மிட்டுள்­ளது. அதற்­காக ரூ.9கோடியே 30 லட்­சம் செலவில் கட்­ட­மைப்­புகளை,காவல்­துறை உத­வியுடன் ஏற்­படுத்­திக்­ ொக ள்ள இருக்கி­றது.இதன் கீழ், மத்­திய அர­சி­டம் 10 இணை அலைவரி­சை­களை மாநக­ராட்சிவாங்க இருக்கி­றது.மேலும், 10 இடங்­க­ளில் டவர்­க­ளை­யும் நிறுவ உள்ளது. புதி­தாக 1,200 வாக்கிடாக்கிகளும் வாங்­கப்­படஉள்­ளன. தொழில்­ நுட்பஉத­விகளை வழங்­குவ­தற்காக காவல்­து­றை­யிடமி­ருந்து 6 அலுவ­லர்­க­ளும்அழைக்­கப்­பட உள்­ள­னர்.இதன் மூலம் மாநக­ராட்சி­யின் தகவல் தொடர்பு வலிமை பெறும். பேரிடர் காலங்­க­ளில் நிவா­ர­ணப்பணிகளை துரி­த­மாக மேற்­கொள்­ள­வும் உத­வி­யாக இருக்கும். இவ்­வாறு அதிகாரிகள் கூறினர்.