திருச்சி பசுமணிநகரைச் சேர்ந்த அசோக்குமார் (37) தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில், தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே காரின் முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், மின்வாரியத்தினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதிய கார் விபத்து;






