முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தொலைந்த தங்க தாலி டாலர் மீட்பு – மீட்பு குழுவினருக்கு பாராட்டு

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தொலைந்த தங்க தாலி டாலர் மீட்பு – மீட்பு குழுவினருக்கு பாராட்டு
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்திருந்த தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தம்பதியினர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத் தாலியின் டாலர் ஆற்றில் தவறவிட்டது.
இதுகுறித்து ஆற்றில் தவறிய பொருட்களை மீட்கும் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர்கள் பழனிச்சாமி, வீரவநல்லூரைச் சேர்ந்த ஜின்னா மற்றும் ஜெய்லானி ஆகியோர் தீவிரமாக தேடி, ஆற்றில் காணாமல் போன தங்கத் தாலி டாலரை பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் அந்த தங்கத் தாலி டாலர், பாவூர்சத்திரம் சேர்ந்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொருளை மீண்டும் பெற்றுக் கொண்ட தம்பதியினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீட்பு குழுவினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்த மனிதநேய செயலுக்காக மீட்பு குழுவினருக்கும் உதவிய நண்பர்களுக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்படுவதாக, கட்சியின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P. நவாஸ் ஷரீப் தெரிவித்தார்.