அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கல்

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கல்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாம் இந்தியர் கட்சியின் சார்பில் வேட்பாளர் என். பாலசுப்பிரமணியன் இன்று (30.03.2026, திங்கட்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அம்பாசமுத்திரம் தேர்தல் அதிகாரி ஆயுஸ் குப்தாவிடம், நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில், தேவையான ஆவணங்களுடன் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக, வேட்பாளர் என். பாலசுப்பிரமணியன் ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனுத்தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் களை நிறுத்தியுள்ள நிலையில், நாம் இந்தியர் கட்சியும் தன்னம்பிக்கையுடன் போட்டியிடுகிறது. மக்கள் நலத் திட்டங்கள்,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தாம் போட்டியிடுவதாக வேட்பாளர் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் போட்டி முதல் நாளிலேயே சூடுபிடித்து வருவதால், அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.