ஸ்ரீமுஷ்ணம் அருகே மராந்தூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் கபால ஈஸ்வரி ஆலயத்தில் மிளகாய் யாகம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மராந்தூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஐயனார் மற்றும் கபால ஈஸ்வரி கோவிலில் ஆவணி மாத அமாவாசை யாகம்
நடைபெற்றது முன்னதாக விநாயகர் முருகன் ஆஞ்சநேயர் அய்யனார் கபால ஈஸ்வரி அபிஷேக ஆராதனை தொடங்கி சுமார் 11 மணி அளவில் மிளகாய் யாகம் ரத்தினசாமி குருசாமி அவர்களால் தொடங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதோடு தங்கள் குடும்பத்தில் உள்ள பில்லி சூனியம் ஏவல் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் கடன் பிரச்சினை தீர வேண்டி பக்தர்கள் மிளகாய் கொண்டு வந்து யாகத்தில் நேர்த்திக் கடனுக்காக செலுத்தினர் அதோடு பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமண தடை நீங்கும் எனபல்வேறு வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் இங்கு வரும் பக்தர்கள் நம்புவதாக கூறப்படுகிறது






