திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்ஆவணி
திருவிழாவில் நேற்று காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்
திலும், பகலில் பச்சை சாத்தி பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.திருவிழாவின்
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், (2ம் தேதி) நடைபெறுகிறது.கடந்த ஆக.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும்
காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில்
எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று முன்தினம் 7ம் நாளன்று வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்திதங்க சப்பரத்தில் முன்பக்கம் சிவன்அம்சமாகவும்,பின்பக்கம் நடராஜர் அம்சமாகவும் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். நேற்றுகாலை7மணிக்கு
பந்தல்மண்டபம், தையல் நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்திபிரம்மா அம்சத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேல கோயில் சேர்ந்தார். தொடர்ந்து பந்தல்மண்டபம், வைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணியபிள்ளை வகையறா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,சிறப்பு தீபாராதனை நடைபெற்று, மதியம் 12 மணிக்கு பச்சை சாத்தி,பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்தார்.(1ம் தேதி) காலை சுவாமி குமரவிடங்கப்பெருமானும், சுவாமி அலைவாயு கந்தப்பெரு மானும் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி நெல்லை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண்சாத்தி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து சுவாமி குமர விடங்கப் பெருமான், வள்ளியம்மனும் பகலில் தனித்தனி பல்லக்கிலும்,இரவு சுவாமிதங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும்,அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான தேரோட்டம், நாளை(2ம் தேதி) நடைபெறுகிறது. காலை6.30மணிக்கு தேரோட்டம்
துவங்குகிறது.
திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதியுலா






