நெல்லையில் அ.இ.அ.தி.மு.க தேர்தல் வியூகம் – நிர்வாகிகளுக்கு டாக்டர் இசக்கி சுப்பையா ஆலோசனை
திருநெல்வேலி, மார்ச் 23:
நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று (23.03.2026) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கழகம் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் இசக்கி சுப்பையா அவர்கள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பூத் பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதற்கான திட்டங்கள், வாக்காளர் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை பணிகள் குறித்து டாக்டர் இசக்கி சுப்பையா அவர்கள் விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், கட்சியின் வெற்றிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.






