திருநெல்வேலியில் வாக்காளர் சேவை எண் 1950 குறித்து தீ விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலியில் வாக்காளர் சேவை எண் 1950 குறித்து தீ விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி, மார்ச் 23:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சேவை எண் 1950 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நெருப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனித்துவமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், “1950” என்ற எண்ணை தீ வடிவில் உருவாக்கி, வாக்காளர்களுக்கு அந்த எண்ணின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்காக 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் செயல்முறையில் அனைவரும் அவசியம் பங்கேற்று, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், தேர்தல் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.