சேரன்மகாதேவி,
மார்ச் 21 .
சேரன்மகாதேவியில் ரம்ஜான் கொண்டாட ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் பைக் மீது மிளா மோதியதில் பரிதாபமாக பலியானார் சேரன்மகாதேவி அனவரத நல்லூர் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் முஹம்மது ரியாஸ் (21) திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த முகமது ரியாஸ் நேற்று காலை நண்பரை பார்க்க பைக்கில் பத்தமடைக்கு சென்றுள்ளார்.
சேரன்மகாதேவி ரவுண்டண்ணா கீழ்புறம் சென்றபோது திடீரென சாலையில் குறுக்கே மிளா ஒன்று பாய்ந்தது அப்பொழுது பைக் மீது மிளா மோதியதில் நிலை தடுமாறிய கீழே விழுந்த முகமது ரியாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் மருத்துவமனைக்கு சென்று முகம்மது ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக சேரன் மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் விடுமுறையில் ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






