நெல்லையில் திமுக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைந்த கூட்டம்

நெல்லையில் திமுக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைந்த கூட்டம
நெல்லை, மார்ச் —
திமுக நெல்லை மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் அணி கூட்டம் நேற்று மாலை நெல்லை மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அரசு குற்றத்துறை வழக்கறிஞர் திரு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு பாலச்சந்தர் மற்றும் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருமதி காமினி தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முக்கியமாக நடைபெறவுள்ள தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இத்தேர்தலில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு கிரிராஜன் எம்பி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 6 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
மேலும், வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.