முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: கலைஞர் நகர் பகுதியில் தெருமுனை கூட்டம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: கலைஞர் நகர் பகுதியில் தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவர்ுமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நகர் பகுதியில் 65வது வார்டில் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டம் 65வது வட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் சேகர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜ்  கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றினார்.

மேலும் மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை கழக பேச்சாளர் வன்னை அரங்கநாதன், கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் ஆட்சிச் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் என். செந்தமிழ் செல்வன் நன்றியுரை வழங்கினார். இதில் 65வது வார்டு வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.