வீரவநல்லூரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

வீரவநல்லூரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத்தின் 7-வது வார்டுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 7-வது வார்டு கவுன்சிலர் ப. வெங்கடேஸ்வரி கலந்து கொண்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் வீரவநல்லூர் திமுக அவைத்தலைவர் இரா. பழனி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்கள் விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டி உடல்நலத்தையும் திறமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.