திருச்சி, திருவரம்பூர்:
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இப்தார் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மண்டல செயலாளரும் 17வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ந. பிரபாகரன், விசிக மாவட்ட செயலாளர் திலீபன் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் பீர்முகமது சேஷக், மாநில இஸ்லாமிய ஜனநாயக பேரவை தலைவர் புரோஸ் கான், மாவட்ட பொருளாளர் ஏர்போர்ட் பெரியசாமி, முன்னாள் மண்டல செயலாளர் அ.க. தமிழ்நாதன், மாவட்ட துணைச் செயலாளர் குணா, அரியமங்கலம் பகுதி வட்ட செயலாளர் அலிகான் பாபு உள்ளிட்டோர் கலந்
து கொண்டனர்.
மேலும் அரியமங்கலம் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள், தோழமை கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






