இனி கூடுதல் விலை கொடுக்க வேண்டாம்! மதுபாட்டிலுக்கு ரசீது வழங்கப்படும்!! தீபாவளிக்கு பிறகு அமலாக்கிறது!!!

சென்னை ஆகஸ்ட் 30 டாஸ்மார்க் கடைகளில் வழங்கும் மது பாட்டில்களுக்கு இனி கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் ஏனெனில் அங்கு வாங்கும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்கப்பட உள்ளது இத்திட்டம் தீபாவளிக்கு பிறகு அமலாக்கிறது தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்கிறது இங்கு பீர், பிராந்தி, ரம்,ஜின் உள்ளிட்ட மது வகைகள் விற்கப்படுகிறது இங்கு விற்கப்படும் மது பாட்டில்களுக்கு தலா 10க்கும் அதிகமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக நாள்தோறும் புகார்கள் எழுந்தவுடன் உள்ளன டாஸ்மார்க் கடைகளில் விற்பனைக்கு செய்யும் ஊழியர்களிடம்  மது பிரியர்கள் தினமும் இது குறித்து தகரா­றில் ஈடுபடுவதைப் பார்க்க முடியும் இருந்து மது பாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக பத்து வசூலிக்கப்படுகிறது  இதுக்கு ஒரு கேள்வி எழுப்பினாலும் அங்கு பணிபுரியும் கடை ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை அதே நேரத்தில் மது பாட்டில் கிடைத்தால் போதும் என்ற வேகத்தில் மது பிரியர்கள் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வாங்கி செல்கிறார்கள் இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர உள்ளது அதாவது டாஸ்மார்க் சில்லறை விற்பனை கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு கட்டாயம் ரசீது வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது அதாவது மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அங்கிருந்து அனுப்பப்படும் மதுப்பாட்டில்களில் பார்க்கோடு மூலம் தகவல் அடங்க லேபில்களை ஒட்டி அனுப்பப்பட உள்ளது இதில் மது தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் பெயர் தயாரிக்கப்பட்ட தேதி விற்பனை செய்யக்கூடிய கால நிர்ணயம் மற்றும் விலை விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெறிருக்­கும் இந்த மது பாட்டில்களை விலைக்கு வாங்கும் டாஸ்மார்க் நிறுவனம் அவற்றை சில்லறை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்யும்போது அதற்கு ரசீது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதற்காக டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு கைகளால் இயக்கக்கூடிய­ ஸ்கேனர்கள் வழங்கப்படும் விற்பனை செய்யும் மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள லேபில்களில் அதன் மூலம் ஸ்கேன் செய்யும்போது அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்படும் ரசீதில் இடம் பெறும். தற்போது இரண்டு மதுபான தொழிற்சாலைகள் மற்றும் மதுவை பாட்டில்களில் அடைக்கும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே பார்க்கோடுகள் மூலம் தகவல் பாட்டில்களில் ஒட்டப்பட்டு வருகிறது, இந்த முறையை அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் பேரில் இது தீபாவளிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களுக்கு தீபாவளிக்கு பிறகு ரசீது வழங்கப்பட உள்ளது இதன் மூலம் மதுவின் தன்மை உள்ளிட்டவைகளை அறிய முடியும் மேலும் போலியான மது பாட்டில்கள் விற்பனையும் தடுக்கப்படும் அதே நேரத்தில் வேறு மாநிலங்களில் ­விற்கப்­ப­டும் மது வகைகளும் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.