தூத்துக்குடி மாநகராட்சியில் மகளிருக்கான பிரத்யேகமாக பூங்கா அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசும்போது, “மாநகராட்சியில் மண்டலவாரியாக நடத்தப்பட்ட மக்கள் குறைதீ ர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். இதனால் மனுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அனைவரது ஒத்துழைப்பினால் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2 வதுஇடம் பிடித்துள்ளது.தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்படும்.மழைநீர் தேங்காதவகையில்,அனைத்து பகுதிகளுக்கும் கால்வாய் அமைக்கப்படும். சாலைகளில் திரியும்கால் நடைகளை அடைப்பதற்காக வஉசி கல்லூரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது மேலும், கால் நடைகளுக்கான அடையாள அட்டை வழஙகுகப்படும். அதில் உரிமையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம் பெறும் அரசுமருத்துவமனை,பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறிய அளவிலான நூலகம் அமைக்கப்படும்.ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் நூலகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் மகளிர்களுக்காக பிரத்யேகமாக பூங்காஅமைக்கப்படும். முத்துநகர்பூங்கா புதிய,பழைய ேருந்து நிலையங்களில் மற்றும் கழிவறைகள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் ம ாநகராட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மேயர், “தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றப்பட்டது அதுபோல் 4 மண்டல அலுவலகஙகளிலும் சுதந்திர தினவிழா நடந்தது என்றார். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறை வேறறப்பட்ட து மாநகர ட்சி துணை ஆணையர் ராஜாராம்,துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸபர்,ரமேஷ் மாநகராட்சி ஆணயர் நேர்முக உதவியாளர் துரைமணி , அலுவலர் பலரும்கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் மகளிருக்கான பூங்கா: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்!






