அஞ்சலி.. கையில் விருதுடன் செம சந்தோசம்..

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தனது தமிழ் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. பின்னர் வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் இவரின் திரை பயணத்திற்கு பெரும் பங்கு வகித்தது. நடிப்பு திறனை வெளிக்காட்டிய படமாகும். தொடர்ந்து தமிழில் பயணித்து வந்த இவர், தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 

தெலுங்கு சினிமாவிலும் வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் செம ஹிட்டானது. அதிலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வென்றார். மேலும் இது இவரின் 4வது ஃபிலிம்பேர் விருதாகும்.

ஃபிலிம்பேர் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் சென்ற அஞ்சலி, போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அஞ்சலியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.