சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை முதலாம் ஆண்டு விழா

 

சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை முதலாம் ஆண்டு விழா

தென்காசி பிப்.17

தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் கலையரங்கத்தில் வைத்து சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது

விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் பசுமை கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார் கௌரவ ஆலோசகர் சண்முகசுந்தரராஜா முன்னிலை வகித்தார்

விழாவில் ஆழ்வார்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

மேலும அனைத்து சமுதாயப் பேரவை தலைவர் செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி மாரியப்பன், ராஹத் அறக்கட்டளை தலைவர் முஸ்தபா நூரணி ,வேழம் அகாடமி மாஸ்டர் முத்துராமன், கதிரேசன் ,பாலன், ஜெகதீஷ், துரையப்பா, ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்

விழாவில் கீழ ஆம்பூர் மீனாட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

சிறந்த சமூக சேவகர்களுக்கான
நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

விழா முடிவில் ராமசாமி பரமசிவம்
நன்றி கூறினார்

ஏற்பாடுகளை கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்