ஜே சி பி ஓட்டுனருக்கு அடி உதை அடி தாங்காமல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஓடிய ஓட்டுனர்!

சேத்தியாதோப்பு அருகே ஜே சி பி ஓட்டுனருக்கு அடி உதை அடி தாங்காமல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஓடிய ஓட்டுனர்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தகுமார் இவர் நாள்தோறும் ஜேசிபி ஓட்டுனராக எழும்பூர் ஏரியில் டிராக்டர் டிப்பரில் மண் அடிப்பது வழக்கம் வழக்கம்போல் நேற்று சுமார் 4 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி மற்றும் மணி இருவரும் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளுமாறு அரவிந்த் குமாரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது மணல் அல்லினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என அரவிந்தகுமார் தெரிவிக்க அவர்கள் இருவரும் மது போதையில் வந்து அரவிந்த் குமாரை பலமாக தாக்கினார் இதனை தட்டிக் கேட்க வந்த ஜோதி மணியும் சரமாரியா தாக்கியதாக தெரிகிறது அடி தாங்க முடியாமல் அரவிந்த் குமார் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஓடியதாக தெரிகிறது போலீசார் இல்லாத காரணத்தினால் உடல் சோர்வு மற்றும் உடல் வலியால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார் பாதிக்கப்பட்டு இரண்டு நாள் ஆகியும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது