தலித் ஊராட்சி மன்ற தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்…!

தலித் ஊராட்சி மன்ற தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்…!

நடவடிக்கை எடுக்குமா விழுப்புரம் மாவட்ட காவல்துறை….!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஒட்டம்பட்டு ஊராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அருணா முருகன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒட்டம்பட்டு ஊராட்சியின் ஐந்தாவது வார்டு உறுப்பினரான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஏழுமலை த/பெ கோவிந்தன் மற்றும் அவரது மனைவி அஞ்சுகம் க/பெ ஏழுமலை ஆகியோர் தனது உறவினர்கள் பலத்தை வைத்து கொண்டு தொடர்ச்சியாக ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமலும் சாதி ரீதியாக அவமானப்படுத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அருணா முருகன் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் கமிஷன் பணம் கேட்டு ஏழுமலையும் அவரது மனைவி அஞ்சுகம் அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் கமிஷன் பணம் தராததால் ஆத்திரமடைந்த ஏழுமலை, அஞ்சுகம் மற்றும் அடியாட்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோருடன் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கொலை வெறி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி,மனித உரிமைக் காப்பாளர்  நா.பிரசாந்த் BA.,LLB., வலியுறுத்துகிறோம்.