விஜய் நடித்த கோட் படம் முதல் கார்த்தியின் மெய்யழகன் படம் வரை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் மாதமாகவே அமைந்தது. இந்த மாதம் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன், விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 மற்றும் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 5-ல் கோட்
செப்டம்பர் மாதம் ஆரம்பமே பிரம்மாண்ட வசூல் வேட்டை காத்திருக்கிறது. ஏனெனில் முதல் படமாக நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக எந்த தமிழ்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனையை கோட் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






