அரசு பணியை இலக்காக கொண்ட மாணவர்கள் – சேரன்மாதேவி பல்கலைக்கழகக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

சேரன்மாதேவி, ஜன.27:

சேரன்மாதேவி மேனான் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 27.01.2026 (செவ்வாய்க்கிழமை) அரசு பணிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் நோக்கம் குறித்து பேராசிரியர் விக்டர் பாபு விளக்க உரையாற்றினார்.

வணிகவியல் துறை பேராசிரியர் நம். பிராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ராய் அகாடமி இயக்குநர் N. வலன் சந்திரா சிறப்பு உரையாற்றி, அரசு தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், தேர்வுகளில் விடை எழுத வேண்டிய பயிற்சிகள், காவல் துறை பணியின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர் கி. சகாயராஜ் முதன்மை உரையாற்றி, மாணவர்கள் அரசு பணிகளை இலக்காக கொண்டு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பேராசிரியர் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முதல் அமர்வில் காவல் துறை தொடர்பான தகவல்களும், இரண்டாம் அமர்வில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.