வீரவநல்லூரில் மஹா லட்ச தீப விழா – பக்தர்கள் திரளாக பங்கேற்பு
வீரவநல்லூர்:
18.01.2026.
வீரவநல்லூர்

அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோவிலில், ஸ்ரீ ஆருத்ரா தீப வழிபாட்டு குழு சார்பில் நடத்தப்பட்ட மஹா லட்ச தீப விழா 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கோவில் வளாகம் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு, ஆன்மிக ஒளியால் பி

ரகாசித்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீப வழிபாடு செய்து, இறைவனை வழிபட்டனர். இந்த லட்ச தீப நிகழ்ச்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
விழாவை திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் உயர்திரு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ அவர்கள் சிறப்பாக தொடங்கி வைத்தார். விழாவிற்கு சிவசக்தி அண்ணாச்சி, ஓசூர் கண்ணன், முன்னாள் துணைத் தலைவர் முருகன், மயோபதி, ராமசாமி, சுரேஷ் ஐயர், நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், லெட்சுமி மாரியப்பன் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு வழங்கினர்.
மேலும் விழா ஏற்பாட்டாளர்களாக ரமேஷ், விக்கிரமாதித்தன், முருகானந்தம், பொன்ராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த விழாவில் ஸ்ரீ மரகதாம்பிகை திருவிளக்கு வழிபாட்டு குழு அமைப்பாளர் திருமதி ம. தாமரை செல்வி, தலைவர் திருமதி ர. கஸ்தூரி, செயலாளர் திருமதி ச. ஆறுமுகத்தம்மாள், உறுப்பினர் திருமதி பி. வெங்கடேஸ்வரி ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
அதேபோல் இந்து முன்னணி ந. முத்துப்பாண்டியன், ர. லோகநாதன், ர. ஹரி பாபு, அ. சீதாராமன், ம. முத்து கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
மஹா லட்ச தீப விழா அமைதியும் ஆன்மிக எழுச்சியும் நிறைந்ததாக நடைபெற்றதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






