போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி.
வீரவநல்லூர் ஜனவரி 19 சேரன்மகா தேவியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு போலீஸ் பொதுமக்கள் நல்லுரவு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமாரின் அறிவுறுத்தலின் படியும் சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜின் ஆலோசன் படியும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவில் போலீஸ் பொதுமக்கள் நல்லறவு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது போட்டியினை இன்ஸ்பெக்டர் தர்மராஜ் துவக்கி வைத்தார், இதையொட்டி சிறுவர்கள் பெண்கள் ஆண்களுக்கென தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் எஸ். ஐக்கள் சுடலை கண்ணு, அண்ணா ஜோதி, சிறப்பு எஸ்.ஐக்கல் ஹரிஹர சுப்பிரமணியன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






