நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்.14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் அறிவிப்பு

டெல்லி:ஆக.28  நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார்அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதிவரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு ஆதார் ஆணையம் முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான
அடையாள அட்டையாகஉள்ளது. இந்தியாவில் 140கோடியே 21 லட்சத்து 68ஆயிரத்து 849 பேர் ஆதார்அட்டை பெற்றுள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்டசேவைகளுக்கு ஆதார் அட்டைஅவசியம். பல துறைகளில்ஆதார் அட்டைகளைஇணைக்க வேண்டியதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆதார் தொடர்பானமோசடிகளை தடுக்க, ஆதார்
பதிவு மற்றும் புதுப்பித்தல்ஒழுங்குமுறை விதிகளைகடந்த 2016ம் ஆண்டு ஆதார்ஆணையம் கொண்டு வந்தது.
ஆதார் பதிவு செய்யப்பட்டதேதியில் இருந்து ஒவ்வொரு10 ஆண்டுக்கு ஒருமுறைசமீபத்திய தகவல்களுடன்
புதுப்பிக்க வேண்டும். அந்தஅடிப்படையில், ஆதார்அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை
அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ளபெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை
புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை,குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவதுஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை
மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செப்டம்பர் 14ம் தேதி வரைகட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம்வழங்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரைபுதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதார்
அட்டை புதுப்பிக்க வேண்டும். மேலும், செப்.14ம்தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள், கட்டணம்
செலுத்தி புதுப்பிக்க முடியும் ஆதார் ஆணையம்அறிவித்துள்ளது