சென்னை: “அமெரிக்காவில் இருந்
தாலும் தமிழ்நாடு பற்றியே தான் என் மனதுசிந்திக்கும்,பார்வை கண்காணி க்கும்”என்று தனது அமெரிக்கப்பயணத்தை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு கடிதம்
ஒன்றை எழுதியுள்ளார் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின்.அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: கடல் கடந்து சென்றாலும் கவன மெல்லாம் தமிழ்நாட்டில்தான்!.
அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கிக்கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து,அதற்கேற்ற வகையில்
முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலாக, மாநிலத்தில் பரவலான அளவில்
தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்
டும் என்ற நோக்கத்துடன் தான் ஒருடிரில்லியன் அமெரிக்க டாலர்
என்கிற பொருளாதார இலக்கை
நமது அரசு நிர்ணயித்து.அதற்கான
பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்
நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் அமெரிக்காவுக்குப்பயணிக்கிறேன்.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு,
பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியேஇருக்கிறோம்.தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச்சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற்கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான்,ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்போடப்பட்டுள்ளன.
2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள்பலவும்பங்கேற்று,புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கானமுதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச்செயல் படுத்துகிற வகையில்,ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு,அவற்றை முறையாகக் கண்காணித்து, தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும் பணியையும் அரசு மேற் கொண்டு வருகிறது.தொழிற்சாலைகள் அமைப்பதற்கேற்ற சூழல்களை உருவாக்கிக் கொடுத்து, உடனடியாக அடிக்கல்நாட்டு விழாக்களையும்,அதன் தொடர்ச்சியாக விரைவாக தொழிற்சாலைத்தொடக்க விழாக்க ளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 21.8.2024அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன் ,ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1இலட்சத்து 6 ஆயிரத்து 803வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டபன்னாட்டுநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில்முனைப்பாக செயல்படுவதுடன் ,மேலும் பல நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் வகையில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற அழுத்தமான அடையாளத்தைத் அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொருகட்டம் தான்,உங்களில்
ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப்பயணம்.ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரைநிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெய
ர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசு
கிறேன். அதன்பின், செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான் சிஸ்கோ வி லிருந்து சிகாகோ செல்கிறேன். 10நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டா ளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்புவிடுக்கிறேன். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின்
தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாட விருக்கிறேன். இவைய
னைத்தும் தமிழ்நாடு தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும்.தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித் தராமல் இருக்கமுடியுமா? செப்டம்பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான்அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அமெரிக்கப்பயணத்திட்டங்களை
ஒருங்கிணைப்பதற்காக தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.
பி.ராஜா முன்கூட்டியே அங்குச் சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். ஆகஸ்ட்27தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்
தப்பயண நாட்களின் நோக்கம்,
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைக
ளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பது தான். முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும்,தமிழ்நாட்டில் எந்த வொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கட்சி நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தி
லும் ஏற்கெனவே இதனை வலியுறுத்தியிருக்கிறேன்.ஆட்சிப் பணியும், கழகப்பணியும் தொய்வின்றித்
தொடர்வதற்கு ஏற்ற வகையில்
ஒருங்கிணைப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அவற்றுடன்
ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
கட்டுப்பாடு காக்கின்ற வகையில்,
செயலில் வேகம்-சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி
செயலாற்றுங்கள்.நம்மீது விமர்சனம் செய்ய விரும்புவோர்,
விவாதம் நடத்துவோர் ஆகியோருக்குஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்.
வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர
வேண்டியதில்லை. அமெரிக்கா வில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச்சிறகு விரிக்கிறேன்.
உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதது.






