“திமுகவில் சீனியர்களை ரஜினியை வைத்து ஸ்டாலின் அவமதிக்கிறார்”; கே.பி.முனுசாமி பேட்டி.

கிருஷ்­ண­கிரி, ஆக., 27: “திமு­க­வில் உள்ளசீனி­யர்­களை வெளி­யேற்ற முடி­யா­த­தால் ரஜி­னி­காந்தை வைத்து தமி­ழக முதல்­வர் ஸ்டாலின் அவர்­களை அசிங்­கப்­ப­டுத்­து­கி­றார்” என அதி­முக துணைபொதுச் செய­லா­ளர் கே.பி.முனு­சாமி தெரி­வித்­துள்­ளார்.இது தொடர்­பாக நேற்று கிருஷ்­ண­கி­ரி­யில் செய் ­தி ­யா­ளர்­க­ளி ­டம் பேசிய அவர், “நடந்து முடிந்த அமைச்­சர் எ.வ.வேலு­வின் புத்­தகவெளி­யீட்டு விழா­வில்பேசிய ரஜி­னி­காந்த்,முதல்­வரை புகழ்ந்து பேசி­யுள்­ளார். திமுக தலை­வர் ஸ்டாலின்தனது தந்­தை­யின் ஆட்­சி­யில் பல்­வேறு பொறுப்பு­கள் வகித்து அதன்பிறகு தற்போது ஆட்­சி­யைப்பிடித்­துள்­ளார்.எம்­ஜி­ஆர், ஜெய­ல­லிதா மறை­வுக்­குப்பிறகு அடிப்­படை உறுப்­பி­ன­ராக இருந்து படிப்­ப­டி­யாக  உயர்ந்து இன்றுபொதுச்செய­லா­ளர் ஆகி­யுள்­ளார் பழ­னி­சாமி. இது ரஜி­னி­காந்­துக்கு தெரி­யாது,ஆகவே,முதல்­வரை புக­ழ­ வேண்­டும் என்­ப­தற்­காக ரஜி­னி­காந்த்தான்­ தோன்­றித்­த­ன­மாக பேசக் கூடாது.தமி­ழக முதல்­வர் ஸ்டாலின் திமு­க­வில் உள்ளசீனி­யர்­களை வெளி­யேற்ற முடி­யாத நிலை­யில், எ.வ.வேலு எழு­திய புத்­தக வெளி­யீட்டு விழா­வில் ரஜி­னி­காந்த்தை அழைத்­துப்பேச ­விட்டு சீனி­யர்­களை அவ­மா­னப்­ப­டுத்தி இருப்­ப­தாக எனக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது.திமு­க­வுக்கு நீண்ட காலம் உழைத்த சீனி­யர் துரை­மு­ரு­கன் உட்­பட மூத்ததலை­வர்­கள் வெளி­யேற வேண்­டும் எனரஜி­னி­காந்தை வைத்து அவ­மா­னப்­ப­டுத்தி உள்­ளார்  ஸ்டாலின்.இது­ போன்று 2ம் கட்ட தலை­வர்­களை அதி­முக ஒரு­ போ ­து ம் அவ­மா­னப்­ப­டுத்­தி­யது கிடை­யாது.பாஜக மாநில தலை­வர் அண்­ணா­மலை தலை­மைப் பொறுப்பேற்று 3 ஆண்­டு­கள் நிறைவு பெற்­றுள்­ளது.இந்த 3 ஆண்­டு­க­ளில் அவர் மக்­களைச் சந்­திக்­க­வில்லை, மாறாக,ஊட­கங்­கள், பத்­தி­ரி­கைகளை சந்­தித்து அர­சி­யல் செய்து வரு­கி­றார். இந்த 3 ஆண்­டு­க­ளில் அவ­ரது ஒவ்­வொரு கருத்­து­களும் முன்­னுக்­குப் பின்முர­ணாகவே இருந்­துள்­ளன. ஜெய­ல­லி­தாவை பற்றி கருத்து சொல்­லும் போது, அண்­ணாமலை‘என்­னு­டைய மனை­வி­யும் ஆளுமை மிக்­க­வர்’ என்று சொல்­கி­றார். பின்­னர் கடு­மையாக விமர்­ச­னம் செய்­கி­றார், இப்­படி முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசக்கூடி­ய­வ­ருக்கு ஒரு தலை­வ­ராக வர எந்­த­வி­த­மானதகு­தி­யும் இல்லை. கடந்த மக்­க­ள­வைத் தேர்­த­லில் ஊட­கங்­கள், பத்­தி­ரி­கைகளுக்கு பல்­வேறு செய்­தியை அண்­ணா­மலை சொன்­னார். இந்­தத் தேர்­த­லில் 25 தொகு­தி­க­ளில் பாஜக கூட்­டணி வெற்றி பெறும்.அதி­முக காணாமல் போகும் என்­றார்.இரண்­டா­வது பெரியகட்சி பாஜக எனச்சொன்னார் அண்­ணா­மலை.ஆனால், ஓர் இடத்­தி­லாவது பாஜக வெல்ல முடிந்­ததா? கடந்த முறை வென்ற கன்­னி­யா­கு­மரி தொகு­தி­யில் கூட தோற்­ற­தால் அண்­ணா­ம­லைக்கு பயம் வந்துவந்­து­ விட்­டது.தலைமை பொறுப்­பில் இருக்­கும் வரை ஏதாவது ஒரு கருத்தை சொல்­கி­றார்.நிச்­ச­ய­மாக பாஜக தலைமை இதையெல்­லாம் உணர்ந்து அவரை தலை­மைப் பொறுப்பில் இருந்து வெளி­யேற்­று­வார்­கள். அதற்­காகத்­தான் அவர் லண்­ட­னுக்­குப் படிக்­கப் போவ­தாகச் சொ ல்லி வரு­கி­றார்.அதி­முக பொது­வாக அனை த்­துத் தேர்­த­லி­லும் போ ட்­டி­யி­டக்கூடிய கட்சி. கூட்­டணி அமைத்­தும் தேர்­தலை சந்­தித்து இருக்­கி­றது.கூட்­டணி இல்­லா­ம­லும் தேர்­தலை சந்­தித்­தி­ருக்­கி­றது. அந்­தந்த காலத்­துக்கு ஏற்­ற­வாறு கூட்­டணி அமைத்து தேர்­தலை சந்­திக்­கும் இயக்­கம் அதி­முக. அதே போ­லத்­தான் 2024லும் கூட்­டணி அமைத்து தேர்­தலை சந்­தித்­தோம். அந்­தத் தேர்­தலில் தோல்வி அடைந்­தா­லும்­ கூட 1 கோடி வாக்­கு­கள் பெற்று எதிர்க்­கட்சி என்ற நிலை­யில் இருக்­கி­றோம்.வரு­கின்ற 2026 தேர்­த­லில் அந்­தச் சூழ­லுக்கு ஏற்­றவாறு யார் யார் வரு­கி­றார்­கள் என பார்த்துகூட்டணி அமைத்து தேர்­தல் வெற்றி பெறு­வோம். தேர்­தல் ஆணை­ய­மும்,உச்ச நீதி­மன்­ற­மும் அதி­முக பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி என தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. ஒன்­றரை கோடி தொண்­டர்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளாக உள்ள பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் ஒன்று சேர்ந்து எடப்­பாடி பழ­னி­சாமியை பொதுச் செய­லாள­ராக தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்­கள்.ஆகவே,அதி­மு­க­வில் எந்த பிள­வு­மும்  இல்லை. அதி­முக எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யின் கீழ் தான்இயங்­கு­கி­றது”என்று அவர் தெரி­வித்­தார். அப்போது கிருஷ்­ண­கிரி கிழக்கு மாவட்ட அதி­முக செய­லா­ளர் அசோக்­கு­மார் எம்­எல்ஏ உள்­ளிட்­டோர் உடன் இருந்­த­னர்.