அறுபது வயதான ஆண்களுக்கும் வருகிறது விடியல் பயணம்
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு , அரசு பஸ்களில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் , இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது
தமிழகத்தில் , இரண்டாயிரத்து இருபத்து ஒன்று முதல் விடியல் பயணம் எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இது அவர்களின் பயண செலவுகளை குறைத்து , வேலை மற்றும் கல்விக்கு உதவுகிறது . மகளிருக்கு மட்டுமான இந்த திட்டத்தை , ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என , கோரிக்கை விடுக்கப்பட்டது . இந்நிலையில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு , இலவச பஸ் பயண திட்டத்தை தி . மு . க , அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது . தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் , ‘ அனைத்து தரப்பு ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது . இதையடுத்தே , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்’ என்றனர்






