முதல்வர் ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை: சென்னை தேனாம் ­பேட்­டையில் உள்ள இல்­லத்­தில் முதல்­வர் ஸ்டாலினை, மக்­கள் நீதி மய்­யம் தலை­வர் கமல்­ஹாசன் சந்தித்து பேசி­னார்.மறைந்த முன்­னாள் முதல்­வர் கருணாநிதி உரு­வம்பொறித்த நாணயம் வெளி­யிட்டு விழாவில் கலந்து கொள்ள மக்­கள் நீதி மய்­யம் தலை­வர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்­பட்டிருந்த நிலை­யில்,அன்று அவ­ரால் கலந்து கொள்ள முடிய வில்லை.எனவே, நாணயத்தை வெளியிட்­ட­தற்கு முதல்­வரை சந்தித்து தனது வாழ்த்துக்­களை கமல்­ஹாசன் தெரிவித்­தார்.

தொடர்ந்து, மறைந்த முன்­னாள் முதல்­வர் கருணாநிதி உரு­வம்பொறித்த நாணயத்­தையும் முதல்­வரி­ட­ மிருந்து கமல்­ஹா­சன்பெற்றுக்கொண்­டார்.மேலும், முதல்­வர் விரை­வில் செல்­லவிருக்கும் அமெ­ரிக்க பயணத்­துக்­கும் கமல்­ஹா­சன்தனது வாழ்த்துக்­களை தெரிவித்­தார்.இச்­சந்திப்பின்­ போது,மக்­கள் நீதி மய்­யம் கட்சி­யின் பொதுச் செய­லா­ளர் ஆ.அருணாச்­ச­லம் உட­னி­ருந்­தார்.